‘உண்மை’ திரைப்படத்தைத் தயாரித்து, அதில் ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் இயக்குநர் ரவிக்குமார்.. அந்த உண்மை படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சுஜிபாலாவை திருமணம் செய்தது உண்மை என்றும்.. தன் மீது தன் மனைவி சுஜிபாலா சில மாதங்களுக்கு முன்பாக கொலை மிரட்டல் புகார் கொடுத்தது பொய்யான புகார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த உண்மை படத்தின் பிரஸ்மீட்டில்கூட இதைத்தான் சொல்லியிருந்தார். இப்போது இது பற்றிய உண்மைகளை புகைப்பட ஆதாரத்துடன் மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.
சுஜிபாலாவின் பூர்வீக ஊரில் தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டை வாங்கிக் கொடுத்ததாகச் சொல்கிறார் ரவிக்குமார்.
சுஜிபாலாவுக்கும் தனக்கும் அதேவீட்டில் திருமணம் நடந்ததாக கூறுகிறார். ஹனிமூனுக்கு மும்பை, அந்தமான் ஆகிய இடங்களுக்குச் சென்றதாகவும் கூறுகிறார் ரவிக்குமார்.
சுஜிபாலாவுக்கு திருமணத்திற்கு முன்பே பல ஆண்களுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது திருமணத்திற்கு பின்புதான் தனக்குத் தெரிய வந்ததாகவும் சொல்கிறார் ரவிக்குமார்.
சினிமாவில் நடன நடிகராக இருக்கும் பூபதி என்பவருடன் சுஜிபாலா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.
சுஜிபாலாவின் குடும்பத்தினரிடம் தான் நிறைய பணத்தினை இழந்துவிட்டதாகவும், இதனாலேயே தன்னுடைய உண்மை படத்தினை முடித்து வெளியிட முடியாமல் தவிப்பதாகவும் கூறுகிறார் ரவிக்குமார்.
இது குறித்து ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையும், ஆதாரமான புகைப்படங்களும் கீழே :


















