full screen background image

A.L.அழகப்பனின் பேரன் ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படம்

A.L.அழகப்பனின் பேரன் ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படம்

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் இகுவரும் இணைந்து தயாரிக்கும் படம் ரங்கோலி’.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகன் ஹமரேஷ், நடிகர் உதயா மற்றும் இயக்குநர் விஜய்யின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இசை – கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – மருதநாயகம். மக்கள் தொடர்பு – சதீஷ்(AIM).

இயக்குநர் வஸந்திடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்த ரங்கோலி’ திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.   

விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக் குழு அறிவித்திருக்கிறது.

Our Score