எப்பொழுதெல்லாம் ஒரு சராசரி மனிதனை சுற்றி பின்னப்பட்ட கதை திரைப்படமாக உருவாகுகிறதோ, அந்த படங்களை ரசிகர்கள் தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு மனதுக்கு மிக நெருக்கமாக வைத்து அப்படத்தை ரசிப்பார்கள். அந்த படங்களுக்கு எதிர்பார்ப்பும் மிக அதிகம்.
பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா தயாரிக்க, வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடித்துவரும் ‘ரங்கா’ படமும் அந்த வகையை சேர்ந்ததுதான்.
ஒளிப்பதிவாளர் அர்வி, எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் ராம்ஜீவன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் சத்யா, டிசைனர் ட்யூனி ஜான், டான்ஸ் மாஸ்டர் விஜி என முழுக்க இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
காக்கும் கடவுள் ரங்கநாதரை போல தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும், கஷ்டங்களை தாண்டி காக்கும் ஒரு சாதாரண மனிதன்தான் இந்த படத்தின் நாயகன் ரங்கா.
“ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விசுவல் ட்ரீட்டாகவும் இருக்கும். முதல் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறோம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடக்க இருக்கிறது. முழு நீள ஆக்ஷன் திரில்லர் படமான இந்த ‘ரங்கா’வில், இதுவரை நீங்கள் பார்த்திராத சிபிராஜை பார்ப்பீர்கள்.. அதற்கு நான் கேரண்டி…” என நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் வினோத்.