“நாலரை மணி நேரம் மேக்கப்புக்காக படுத்திருந்தார் கமல்” – உருகும் ரமேஷ் அரவிந்த்..

“நாலரை மணி நேரம் மேக்கப்புக்காக படுத்திருந்தார் கமல்” – உருகும் ரமேஷ் அரவிந்த்..

கமலின் ‘உத்தமவில்லன்’ பற்றி ரொம்பவே சிலாகித்து ‘குமுத’த்திற்கு பேட்டியளித்திருக்கிறார் அதன் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்..

“நீங்க உத்தமவில்லனை இரண்டரை மணி நேரம்தான் தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கப் போறீங்க. அந்த இரண்டரை மணி நேரமே கமல் நடிப்பு எக்குத்தப்பா இருக்கும். ஆனா நான் இந்த உத்தமவில்லனை 760 மணி நேரம் நேர்ல நடிக்க வச்சு நேரடியா இஞ்ச் பை இஞ்ச் ஷூட் பண்ணியிருக்கேன்..

40 தடவை ரீடேக் ஆனாலும் முகத்தைச் சுளிக்காம முதல் டேக்குல எனர்ஜியா நடிச்ச மாதிரியே நடிப்பார் கமல். இத்தனைக்கும் அவரால எந்தத் தப்புமே நடந்திருக்காது. எங்கயோ ஒரு மூலையில் ஒருத்தன் சொதப்பியிருப்பான். ஆனா அவன் மேல கோபமே படாமல் திரும்ப செஞ்சி கொடுப்பார்…”

“தெய்யம் என்பது கேரளாவில் இருக்கும் பழம்பெரும் கலை. அதே மாதிரி ‘யஷகானா’வும். தமிழ்நாட்டில் பரதநாட்டியமும் அப்படித்தான். இத யார் மேக்கப் போட்டு பிராக்டீஸ் பண்ணாலும் அது ஒரே மாதிரிதான் இருக்கும்.

கமல் நாலரை மணி நேரம் மேக்கப் போட்டுக்கிட்டு ஆடாம, அசையாம அந்தக் கலையை தன் முகத்துல கொண்டு வந்திருக்கிறார். அதுவும் தெய்யம் மேக்கப் போடும்போது உட்கார்ந்திருக்க முடியாது. அந்த நாலரை மணி நேரமும் மல்லாக்க படுத்தே கிடக்கணும். அப்பத்தான் அதை முகத்தில் வரைய முடியும்.

படத்துல வரப் போற ஒரு பகுதிக்காக இதை கமல் பண்ணல. சாதாரணமா படத்தோட பர்ஸ்ட்லுக் போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார். அந்த டெடிகேஷன் பத்தி பேசுவாங்கன்னு எதிர்பார்த்தா எக்குத்தப்பா எதை, எதையோ பேசுறாங்க…” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

படம் வரட்டும் ஸார்.. வந்தப்புறம் உத்தமவில்லனா கமலை பார்த்த பின்னாடி, இப்படி சொன்னதையும், எழுதியதையும் மீடியாவே மறந்திரும்..!

Our Score