full screen background image

ரஜினியின் அடுத்தப் படத்தின் தலைப்பு லிங்கா..!

ரஜினியின் அடுத்தப் படத்தின் தலைப்பு லிங்கா..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்திற்கு ‘லிங்கா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் கூறுகின்றன.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா-நடிகர் தனுஷின் மூத்த மகன்… அதாவது ரஜினியின் முதல் பேரனின் பெயரும் லிங்காதான். இந்தப் பெயரை ரஜினியே தனது பேரனுக்காக தேர்வு செய்து வைத்திருந்தார்..  இப்போது இந்தப் பெயரையே அடுத்தப் படத்தின் டைட்டிலாகவும் பதிவு செய்துவிட்டார்.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியும் இரண்டு பேர். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா. அப்பாவுக்கு ஜோடி அனுஷ்கா என்றும் மகனுக்கு ஜோடி சோனாக்சி சின்ஹா என்றும் சொல்லப்படுகிறது. இசையமைப்பு ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

ரஹ்மான் இந்தப் படத்திற்கு தன்னிடம் தேதியி்லலை என்று சொல்லி முதலில் மறுத்தாராம். ஆனால் உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ அப்போது பாடல்களை கொடுங்கள்.. இப்போது வேண்டாம். பாடல்கள் அனைத்தையும் தனியாக கடைசியாக படமாக்கிக் கொள்கிறோம் என்று இயக்குநர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் ஒத்துக் கொண்டதாகத் தகவல்.

மைசூரில் அடுத்த வாரம் துவங்கவிருக்கும் இந்தப் படத்தை ஒரே மூச்சில் தயாரிக்க எண்ணியுள்ளார்கள். எனவே அடுத்த 40 நாட்கள் சூப்பர் ஸ்டார் மைசூரில்தான் தங்கியிருப்பார்.  இந்தப் படத்தின் நகைச்சுவை பகுதியை மட்டும் கிரேஸி மோகன் எழுதுகிறாராம்.. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

கோச்சடையான் ரிசல்ட்டை பற்றிக் கவலைப்படாமல் இருக்க ஒரே வழி.. ஏதாவது ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுதான் என்று ரஜினிக்கு யாரோ ஐடியா சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. மின்னல் வேகத்தில் தயாராகிவிட்டார் அடுத்தப் படத்திற்கு..!

காத்திருப்போம்..!

Our Score