வசூல் ராஜாவாகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரஜினி முருகன் திரைப்படத்தின் போஸ்டர் சற்று நேரத்திறகு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படக் குழுவினரில் ஹீரோயினைத் தவிர மற்ற அனைவரும் இணைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். பொன்ராம் இயக்கியிருக்கிறார்.
சென்ற வாரம்தான் காரைக்குடியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றது. படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஆனால் அதற்குள்ளாக படத்தின் வியாபாரம் சூட்டோடு சூட்டாக நடந்தேறிவிட்டதாம். தமிழகத்தின் மொத்த விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்.
திருப்பதி ப்ரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்டர் இன்றைக்கு.. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது.










