full screen background image

“ரஜினி அரசியலில் இறங்கினால் அவரை எதிர்ப்பேன்…” – சரத்குமார் திடீர் அறிவிப்பு

“ரஜினி அரசியலில் இறங்கினால் அவரை எதிர்ப்பேன்…” – சரத்குமார் திடீர் அறிவிப்பு

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கினால் முதல் ஆளாக அவரை எதிர்ப்பேன்…” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “ரஜினி சொல்லியிருப்பதுபோல் தமிழ்நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது என்பதெல்லாம் உண்மையில்லை.

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். நல்ல நடிகர். மிகப் பெரிய சூப்பர்ஸ்டார்தான். நானும் ஒத்துக்குறேன். அவர் எனது நண்பர்தான். இல்லைன்னு சொல்லலை.. ஆனால் தேவைப்படும்போது மட்டும் கருத்து சொல்றது.. மத்த நேரங்கள்ல தேவையில்லையேன்னு அமைதியா இருக்கிறதெல்லாம் கருத்தல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாநிலத்தில் இருந்தால்… அந்த மாநிலத்தில் பணிபுரிந்தால்.. அந்த மாநிலத்தின் சட்டவிதிகளுக்குட்பட்டு அந்த தமிழ்க் கலாச்சாரம்,  தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பவர்கள்தான் இங்கே இருக்க வேண்டும். மொதல்ல தமிழ் உணர்வை மதிக்க வேண்டும். அந்த உணர்வை மதிக்கத் தெரிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும்போது கர்நாடகாவில் ஒரு கருத்து… இங்கே ஒரு கருத்து சொல்றீங்க. அதெல்லாம் இங்க இருக்கக் கூடாது.

நாளைக்கு ரஜினி கட்சி ஆரம்பிச்சாலோ.. நான் முதலமைச்சராகப் போகிறேன் என்று சொன்னாலோ அதனை எதிர்க்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். அதில் சந்தேகமே இல்லை..” என்றார்.

ஜல்லிக்கட்டை டைவர்ட் செய்ய ஒரு புதிய பிரச்சினை கிடைச்சிருச்சு.

நாளைல இருந்து சரத் ரசிகர்கள் – ரஜினி ரசிகர்கள் மோதல் என்று செய்தி பறக்கும் பாருங்க..!

Our Score