திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த ‘ரஜினி முருகனை’ ஸ்டூடியோ கிரீன் வெளியிடுகிறது..!

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த ‘ரஜினி முருகனை’ ஸ்டூடியோ கிரீன் வெளியிடுகிறது..!

இப்போதைய இளம் சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸும், ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இதன் வெளிநாட்டு விநியோகத்தை ஈராஸ் நிறுவனமே மேற்கொள்கிறது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார். மேலும் ராஜ்கிரண், சூரி இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 

இந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score