full screen background image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘குற்றம் 23’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘குற்றம் 23’

“தாய்மை பெற்றெடுப்பதில் மட்டுமல்ல, தத்தெடுப்பதிலும் உண்டு’ என்ற உன்னதமான கருத்தை மையமாக கொண்டு உருவான ‘குற்றம் 23’ திரைப்படம், இந்த மகளிர் தினத்தில் ஒட்டு மொத்த பெண் ரசிகர்களின் பாராட்டுகளையும் அமோகமாக பெற்று வருகிறது.

அருண் விஜய் நடிப்பில்,  அறிவழகனின் இயக்கத்தில்,  மெடிக்கல் – க்ரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்திற்கு, விஷால் சந்திரசேகரின் இசையும், கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசனின் படத் தொகுப்பும் பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.  

“ரசிகர்களின் உள்ளங்களை வென்றது மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் சிறந்ததொரு வெற்றியை தழுவி இருக்கிறது ‘குற்றம் 23’ திரைப்படம். படம் வெளியான முதல் நாளில் இருந்து தொடர்ந்து வர்த்தக ரீதியாக முன்னிலை வகித்து வருகிறது ‘குற்றம் 23’.  ‘வெற்றிமாறன்’ என்கின்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப வெற்றி வாகையை சூடி இருக்கிறார் அருண் விஜய்..” என்கிறார் படத்தினை வெளியிட்டிருக்கும் விநியோகஸ்தர் பிரபு வெங்கடாச்சலம்.

எல்லாவற்றுக்குள் சிகரம் வைத்தாற்போன்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை தன்னுடைய வீட்டிலேயே ‘குற்றம் 23’ படத்தை பார்த்து ரசித்துள்ளார். படம் முடிந்த உடனேயே ஹீரோ அருண் விஜய்க்கு போன் செய்து “குற்றம் 23’ படம் மிக பிரமாதம். இதன் கதையும், உருவாக்கமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னுடைய நடிப்பும், பாடி லாங்குவேஜும் என்னை அதிகம் கவர்ந்தது. நீயொரு நடிகன் என்பதை இந்தப் படத்துல நிரூபிச்சிட்ட..!” என்று வெகுவாகப் பாராட்டினாராம்..!

உச்சிக்குளிர்ந்து போயிருக்கிறார் நடிகர் அருண் விஜய்..!

Our Score