இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆனதையடுத்து ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ரஜினி முதல்முதலாக நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி திரைக்கு வந்தது. அப்படி பார்த்தால் இன்று அவரது 40-வது ஆண்டு கலைப்பயணம் துவங்குகிறது..
வருடங்களை எண்ணிக் கொண்டே வந்தால்தான் கடந்த கால சாதனைகளும் மெல்ல மெல்ல நம்முடன் வரும் என்பார்கள். அந்த வரிசையில் ரஜினிக்காக ‘லிங்கா’ பட டீம் இந்த நாளை கொண்டாடியுள்ளது.
படப்பிடிப்பு இடைவேளையில் லிங்க பட யூனிட்டார் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள் இந்த 40 ஆண்டு கால நிகழ்வை..!
அப்போது அவர்களிடத்தில் பேசிய ரஜினி, “இத்தனை ஆண்டு கால பயணத்திற்குப் பெரிதும் உதவிய… என்னை தங்கள் வீட்டில் ஒருவராகவே நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனது உயிரினும் மேலான ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நடிகனாக்கிய குரு கே.பாலச்சந்தர் உள்ளிட்ட எனது இயக்குனர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.
நாமும் சூப்பர் ஸ்டாரை வாழ்த்துவோம்..!