தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிதாக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் கார்த்தி, இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களில் ஒருவரான நடிகர் கமலஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அடிக்கல் நாட்டி கட்டிடத்தின் பலகையை திறந்து வைத்தனர். இருவரும் தங்களது திருக்கரங்களால் செங்கலை எடுத்து வைத்து வாழ்த்தினர்.
அப்போது கமலஹாசன் பேசுகையில், இந்தக் கட்டிடம் நல்ல முறையில் கட்டி முடித்து குறித்த தேதியில் திறக்கப்பட தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் நாசருக்கும், விஷாலுக்கும் மற்றும் கட்டிட குழுவிற்கும் தெரிவித்தார். மேலும், இக்குழுவினர் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் அனைவருக்கும் தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில், இக்கட்டிடத்தின் கட்டி முடிப்பதே தனது கனவென்றும், அதன் பின்புதான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்தார். தலைவர் நாசர் பேசும்பொழுது, எல்லோருடைய ஆசியோடு இக்கட்டிட பணியை சிறப்பாக முடிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், இம்மாதம் நடக்கவிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கூறினார்.
துணைத் தலைவரான கருணாஸ் பேசும்போது, இக்கட்டிடத்தின் மூலமாக வரும் நிதி நலிந்த கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவ செலவுகள், கல்வி செலவு உட்பட அனைத்து செலவுகளுக்கும் மட்டுமே செலவழிக்கப்படும் என்று கூறினார்.
இக்கட்டிடத்தின் பணிக்காக விஷாலும், கார்த்தியும் சேர்ந்து தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து 10 கோடியை நிதியுதவியாக அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இக்கட்டிடம் செப்டம்பர் 2௦018-ம் ஆண்டு முழுமையாக முடிவடையும் என்று உறுதி அளித்துள்ளனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், பசுபதி, ஸ்ரீமன், S.பிரேம்குமார், A.விக்னேஷ், M.A.பிரகாஷ், அயூப்கான், M.பாலதண்டபாணி, A.L.உதயா, ரமணா, S.D.நந்தா, T.P.கஜேந்திரன், ‘தளபதி’ தினேஷ், திருமதி. S.குட்டி பத்மினி, செல்வி.கோவை சரளா, திருமதி. C.சிவகாமி, திருமதி.சங்கீதா, திருமதி.சோனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கத்தின் நியமன குழு உறுப்பினர்களான L.லலிதாகுமாரி, ஹேமச்சந்திரன், B.அஜெய்ரத்னம், P.A.காஜா மொய்தீன், M.மருதுபாண்டியன், S.M.காளிமுத்து, V.K.வாசுதேவன், மனோபாலா, சரவணன், ஜெரால்டு மில்டன், G.காமராஜ், S.கலிலுல்லா ஆகியோரும் வந்திருந்தனர்.
மேலும் கட்டிட கண்காணிப்பு குழு உறுபினர்களான சிவகுமார், மோகன், சத்யராஜ், சச்சு ஆகியோரும் வந்திருந்தனர்.
பிரம்மாண்டமான செலவில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார், விக்ரம், சூரியா, இயக்குநர் S.P.முத்துராமன், வரலட்சுமி, சுரேஷ், கமிலா நாசர், சிவகார்த்திகேயன், சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், கதிர், சத்யராஜ் வைஜெயந்திமாலா, ஒய்.ஜி.மகேந்திரா, சிவக்குமார், ஷீலா, லதா தயாரிப்பாளர்G.K.ரெட்டி, கார்த்திக், கெளதம் கார்த்திக், பூர்ணிமா, பாக்யராஜ், சாந்தனு, சரோஜாதேவி, ஹரி, ப்ரீத்தா ஹரி, கேமராமேன் பிரியன், பரத், மீனா, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், விச்சு, சுந்தர்.C, சச்சு, மைக் மோகன், கானா உலகநாதன், ஜீவன், லொள்ளு சபா ஜீவா, சாமிநாதன், சாம்ஸ், ராமகிருஷ்ணன், மயில்சாமி, கலையரசன், போண்டாமணி, தன்ஷிகா, மகேந்திரன், ஆன்சன், வெண்ணிற ஆடை நிர்மலா, பவன், செந்தில், ஜெயமாலினி, யோகிபாபு, மன்சூர்அலிகான், லிஸி, காயத்ரி ரகுராம், ஆர்யன், அழகு, M.S.பாஸ்கர், பார்த்திபன், M.N.ராஜம், தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, K.E.ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன், நடிகர் லொள்ளு சபா மனோகர், விஜய் ஆண்டனி, சரத் பாபு, ஆதவ் கண்ணதாசன், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், பிந்து மாதவி, உமா ரியாஸ்கான், ஜனகராஜ், ஜீவா, ஹரிஷ், வாணிஸ்ரீ, தயாரிப்பாளர் 2D ராஜா, லிவிங்ஸ்டன், அருண் விஜய், பாண்டியராஜன், தயாரிப்பாளர் A.L.அழகப்பன், மனோஜ் பாரதிராஜா, பால சரவணன், இயக்குநர் மிஷ்கின், நடிகை சோனா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ஜெயசித்ரா, நடிகர் அசோக், ஹரிகுமார், மிருதுளா, இயக்குநர் R.K.செல்வமணி, சஞ்சீவ், சாக்க்ஷி அகர்வால், துளசி, நந்திதா, காஞ்சனா, R.K.சுரேஷ், தேவயானி, ராஜகுமாரன், சோபி மாஸ்டர் மற்றும் அவருடைய மனைவி, எடிட்டர் மோகன், இயக்குநர் P.வாசு, சக்தி வாசு, ரோகிணி, விவேக், சஞ்சனா சிங், ஜாகுவார் தங்கம், சிம்ரன், ஆர்த்தி, தம்பி ராமையா, கதிர், ஆடுகளம் நரேன், ஷிரிஷ் மெட்ரோ, அம்பிகா, நடராஜன். முனிஷ்காந்த், கிருஷ்ணா, ரேவதி, ஷர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.