full screen background image

முதன்முதலாக ஹிந்தியில் டப்பிங் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினி..!

முதன்முதலாக ஹிந்தியில் டப்பிங் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினி..!

வரும் மே-9-ம் தேதி ரிலீஸாகக் காத்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தில் இன்னொரு சிறப்பு காத்திருக்கிறது.

இதுவரையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தமிழ்ப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டபோது ரஜினி அதில் டப்பிங் பேசியதில்லை.  மவுர் வியாஸ் என்ற 36 வயது பிஸினஸ் காலேஜில் லெக்சரராக இருக்கும் ஒரு டப்பிங் கலைஞர்தான் சூப்பர் ஸ்டாருக்கு குரல் கொடுத்திருக்கிறார். சிவாஜி தி பாஸ் படத்திற்கும், ரோபோட் படத்திற்கும் இவரேதான் குரல் அளித்தவர்.

ஆனால் அடுத்த மாதம் ரிலீஸாகப் போகும் ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி வெர்ஷனில் ரஜினியே டப்பிங் பேசி முடித்துவிட்டாராம். அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு ஹிந்தி மொழி டப்பிங் படத்தில் முதல் முறையாக டப்பிங் பேசுவது இதுவே முதல் முறையாம்..!

6 மொழிகளில் 3850 ஸ்கிரீன்களில் வெளியாகி சாதனை படைக்கக் காத்திருக்கும் கோச்சடையானுக்கு இதுவொரு ஸ்பெஷல் நியூஸ்தான்..!

Our Score