full screen background image

அதிதி ராவ் ஹைதாரி-கெட்டிகா ஷர்மா நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படம்

அதிதி ராவ் ஹைதாரி-கெட்டிகா ஷர்மா நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படம்

இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு பாராட்டுக்குரிய படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா. தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.

சைமன் கே.கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் படத் தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தை கமல்நாதன் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

Our Score