full screen background image

விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது..!

விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது..!

‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப் பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்றைக்கு உறுதி செய்துள்ளனர்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜிகே @ மணிகண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விக்ரம் பிரபவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்தப் படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநரான கார்த்தி எழுதி, இயக்கியுள்ளார். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத் தொகுப்பும், கே.கணேஷ் சண்டை இயக்கம் செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

சமீப காலமாக விக்ரம் பிரபுவின் படங்கள் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது. இது ’ரெய்டு’ படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக் குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Our Score