தெலுங்கில் சென்ற ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கோவிந்துடு அந்தரிவடலே’.
தெலுங்குலகின் ஹாட்டஸ்ட் இயக்குநரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணவம்சிதான் இந்தப் படத்திற்கு கதையெழுதி இயக்கியிருந்தார்.
இதில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சுமார் 30 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 41 கோடியை வசூல் செய்து கொடுத்தது.
இந்தப் படத்தை இப்போது ‘ராம்லீலா’ என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக RAFI MATHIRA இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகிறார்.
ஒளிப்பதிவு – சமீர்ரெட்டி
எடிட்டிங் – நவீன் நூலீ
இசை – யுவன்சங்கர்ராஜா
பாடல்கள் – பரிதி
ஸ்டண்ட் – பீட்டர்ஹெய்ன் – ராம்லக்ஷ்மன்
கலை – அசோக்குமார்
எழுத்து-இயக்கம் – கிருஷ்ணவம்சி
தயாரிப்பு – RAFI MATHIRA
அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான். ஒரு குடும்பக் கதையை நகைச்சுவை, காதல், ஆக்சன் கலந்து கமர்ஷியல் பார்முலாவாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ண வம்சி.
படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.