full screen background image

நயன்தாரா நடிக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !!

நயன்தாரா நடிக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !!

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடும்விதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை Drumsticks Productions மற்றும் Movie Verse Studios  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுவரை பார்த்திராத அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நயன்தாரா தோன்றவுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டராக  பணியாற்றவுள்ளார். பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் குமார் S2 Media.

புதுமையான கதைக்களத்தில், பரபரப்பான  திரைக்கதையுடன், ப்ரீயட் ஆக்சன் டிரமாவாக உருவாகவுள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நயன்தாராவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும்விதமாக, “ராக்காயி” படத்தின் அட்டகாசமான டைட்டில் டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

Our Score