‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..!

‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால், மக்கள் கவனத்தை ஈர்த்து இடைவிடாது  தலைப்பு செய்திகளிலேயே இருந்தனர் ஆரவ்வும், ஓவியாவும்.

இப்போது அவர்களது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டமான செய்தி வந்திருக்கிறது. ஆரவ்வின் ‘ராஜ பீமா’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஆரவ்வுடன் இணைந்து  நடிக்கிறார் ஓவியா.

ஓவியா படத்தில் நடிப்பதோடு அல்லாமல், ஒரு குத்துப் பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனமும் ஆடியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியின் அழகிய பகுதிகளில் இந்தப் பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட மேலும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்த ‘ராஜ பீமா’ திரைப்படம் மனிதன் –  மிருக  முரண்பாடுகளை சுற்றி உருவாகும் கதையம்சம் உள்ள திரைப்படம். இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.மோகன் தயாரிக்கிறார்.

பாலக்காடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அழகிய பகுதிகளில் மிக வேகமாக படமாகி வருகிறது.  

அரை நகர்ப்புற (Semi urban) பின்னணியில் படமாக்கப்படும் முதல்  மனிதன், விலங்கு சார்ந்த திரைப்படம் இதுதான் என்பது ‘ராஜ பீமா’வின் இன்னுமொரு முக்கியமான சிறப்பம்சமாகும்.

 

Our Score