full screen background image

விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்க்கும் ‘ராஜ பீமா’ திரைப்படம்..!

விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்க்கும் ‘ராஜ பீமா’ திரைப்படம்..!

‘பிக் பாஸ் சீசன்-1’ சாம்பியன் ஆரவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அவரின் சினிமா அறிமுகம் ஒரு நீண்ட காத்திருப்பாக அமைந்திருக்கிறது.

காத்திருப்பு எப்போதுமே மிகப் பெரிய பலனை அளிக்கும் என்பதற்கு ஆரவ் ஒரு மிகப் பெரிய உதாரணமாக மாறியிருக்கிறார். அவரது முதல் படமான ‘ராஜ பீமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

“ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச் சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு  மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது” என்று கூறுகிறார் ஆரவ். 

RajaBheema_Dinakaran advt

“ராஜ பீமா’ தலைப்பு மற்றும் போஸ்டரை பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மைதான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்புதான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.

பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம்” என்றார் ஆரவ். 

மேலும், அவர் கூறுகையில், “பொதுவாக, மனிதன் – விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறும் ஆரவ், பாலக்காட்டில்  முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இந்த படத்தை இயக்குகிறார். சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிக்கிறார்.

 

Our Score