ஆணவக் கொலை பற்றிப் பேசும் பாலாஜி சக்திவேலின் ‘ரா.. ரா.. ராஜசேகர்’

ஆணவக் கொலை பற்றிப் பேசும் பாலாஜி சக்திவேலின் ‘ரா.. ரா.. ராஜசேகர்’

பாலாஜி சக்திவேல் இயக்கி வரும் புதிய படம் ‘ரா.. ரா.. ராஜசேகர்’. இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் லிங்குசாமியின் சகோதரி மகனான விஜய் முருகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஸ்ருதி ஹரிஹரன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் கன்னட படமான ‘லூசியா’ மற்றும் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஆகிய படங்களில் நடித்தவர்.

மேலும் சுபிக்சா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி வில்லனாக நடித்திருக்கிறார். சித்தார்த்தா ஒளிப்பதிவு செய்ய ஜாவீத் ரியாஸ் இசையமைத்திருக்கிறார்.

‘காதல்’ படத்தில் ஜாதி வெறி காதலர்களை எப்படி சின்னாப்பின்னமாக்கியது என்பதை சொன்ன பாலாஜி சக்திவேல், இந்தப் படத்தில் சமீப காலமாக தமிழகத்தில் நோய் போல் பரவி வரும் காதல் ஆணவக் கொலைகளை பற்றி பேசியிருக்கிறார். அதோடு இன்றைய சமூக அவலங்களையும் தொட்டுப் பேசுகிறது இந்தப் படம்.

இதனை ‘காதல்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும்கூட சொல்லலாம். அதிலும் ஜாதிதான் பிரச்சினை. இதிலும் ஜாதிதான் பிரச்சினை. அதில் ‘காதல்’ தண்டபாணி வில்லன். இதில் ‘மதயானைக் கூட்டம்’ வேல.ராமமூர்த்தி வில்லன். ‘காதல்’ கிளைமாக்ஸில் மனித நேயத்தை படமாக்கியிருந்தார். இதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான தீர்வை முன் வைத்திருக்கிறாராம்.

இப்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Our Score