full screen background image

மனதைப் பறிமுதல் செய்ய வரும் ‘ர’ திரைப்படம்..!

மனதைப் பறிமுதல் செய்ய வரும் ‘ர’ திரைப்படம்..!

வர வர பிரஸ் மீட்டுகளில் பேட்டின்னு சொல்லிட்டு போனா இயக்குநர்களின் வாயைப் பிடுங்கி நியூஸை வாங்குவதற்குள் நாமளே சினிமா எடுத்திரலாம் போலிருக்கிறது..

“படத்தைப் பாருங்க தெரியும்.. படத்தைப் பாருங்க தெரியும்..” என்கிறார்கள். படத்தைப் போட்டுக் காட்டிட்டா, அப்புறமா நாமதான் இவங்களைத் தேடணும். அப்படித்தான் இருக்கு. இது ஒரு வகை.

இன்னொரு வகையினர்.. கதையின் ஒன்லைனைகூட சொல்லவே மறுக்கிறார்கள். அதான் ஸார் கதை என்கிறார்கள். அதாங்க எது என்று கேட்டால்.. சுற்றி வளைத்து அம்புலிமாமா கதைக்கே அழைத்துச் செல்கிறார்கள்.

அப்படித்தான் இந்த ‘ர’ படத்தின் இயக்குநரும் கதை சொல்கிறேன்னு சொல்லி அதை மட்டும் சொல்லாமல் மத்தக் கதை அத்தனையையும் சொல்லி அனுப்பிட்டாரு..

“ர’ என்ற ஒற்றை தமிழ் எழுத்துக்கு ‘பறிமுதல்’ இல்லைன்னா ‘அபகரித்தல்’ என்று அர்த்தமாம். இந்தக் கதை 18-ம் நூற்றாண்டு நடக்குற கதையின் தொடர்ச்சியாக இன்றைக்கு அதோட பிரச்சினை என்னன்றதுல வந்து முடியும். இதுவொரு மருத்துவ ரீதியான கதையும்கூட. ஒரு கடலில் கப்பல் மூழ்கிக் கிடக்கிறது. அதனுள் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அதை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறாங்கன்னும் சொல்லலாம்..

சஸ்பென்ஸ் திரில்லர் டைம் கதைன்றதால லேசா ஒரு வரி சொன்னாலே உங்களுக்குப் படம் பிடிபட்டிரும்.. அதுனால அது வேண்டாம்.. 16-ம் நூற்றாண்டு, 18-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டு என்று 3 விதமான காலக்கட்டத்தையும் இதுல காட்டப் போறோம். எல்லாமே கிராபிக்ஸ்தான்.. பல வெற்றிப் படங்களுக்கு கிராபிக்ஸ் அமைத்தவர்கள்தான் இதையும் செய்யப் போறாங்க. இது ஜஸ்ட் 15 நிமிஷம்தான் வரும்.. அவ்ளோதான்.

ஹீரோவை ஏதோவொரு சக்தி அடக்கி ஆள நினைக்கும். அது என்னன்றதை ஹீரோ கண்டுபிடிச்சு அதை அழிக்க நினைக்கிறார். அது வெற்றிகரமா முடிஞ்சதான்னு நீங்க தியேட்டருக்கு வந்துதான் பார்க்கணும்..” என்கிறார் இயக்குநர்.

படத்துல அஷ்ரப், அதிதி செங்கப்பா, லாரன்ஸ், ஜெயபிரகாஷ், ரவி பிரகாசம், ஜெயந்த், கீதா பாபு, ரித்திகா, யுவினா மற்றும் பல புதுமுகங்களும் நடிச்சிருக்காங்க. ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய.. ராஜ் ஆர்யன் இசையமைச்சிருக்காரு. லாரன்ஸ் பாடல்களை எழுதியிருக்கார். படத்துல ஒரேயொரு பாடல்தான் இருக்கு. குணசேகர் கலை இயக்கம் செய்கிறார். பிரேம் பூமிநாதன் எடிட்டிங் செஞ்சிருக்காரு. திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி.

கதை, திரைக்கதையை தயாரிப்பாளர் அஷ்ரப்பும், இயக்குநர் பிரபு யுவராஜும் சேர்ந்து செஞ்சிருக்காங்க. வசனத்தை பிரபு யுவராஜும், லாரன்ஸும் சேர்ந்து எழுதியிருக்காங்க. அமீன், அக்பர்ன்னு இரண்டு பேர் தயாரிச்சிருக்காங்க. எழுதி இயக்கியிருக்காரு பிரபு யுவராஜ். இவரும் கதாசிரியர் அஷ்ரப்பும் விமான பைலட்டுகள்.. வானத்துல பறக்குற துறைல இருந்தாலும், சினிமா மீதிருக்கும் அடக்க முடியாத ஆர்வத்தில் விமானத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் டபாலென்று குதித்திருக்கிறார்கள்.

“முற்றிலும் அதிகப்பட்சம் புதுமுகங்களே நடித்திருக்கும் இந்தப் படத்தில் எங்களுடைய புதுமையான ட்ரீட்மெண்ட்டே படத்திற்கு வெற்றியைத் தேடித் தரும்..” என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநர் பிரபு யுவராஜ்.

Our Score