full screen background image

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படம்..!

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படம்..!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 24 A.M. ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது.

இந்தப் படத்தை, பிரபல இயக்குநர்களான ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தின் சிறப்பம்சம், இந்திய சினிமாவே  போற்றி கொண்டாடும் P.C.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும்.

இந்தப் படம் பற்றி 24 A.M. ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான R.D.ராஜா பேசுகையில், “சினிமாவின் வளர்ச்சிக்கு திறமையான இயக்குநர்களும், நல்ல கதைகளும் மிகவும் அவசியம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அந்த வகையில் பெரும் வெற்றிகளை பெற்ற இயக்குநர்களுடன் நாங்கள் அறிமுகப்படுத்தவிருக்கும் இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணனை ஒப்பிடலாம். அவரது திறமையும், சினிமா மீது இருக்கும் காதலும், வெற்றிக்காக வெறித்தனமாக உழைப்பதிலும் அவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவரை போன்ற திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதில் எங்களது 24 a.m. ஸ்டுடியோஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது…” என்றார்.

இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தயாரிப்பாளர் R.D.ராஜா அவர்களின் திறமையினாலும் அசுர உழைப்பினாலும் ’24 a.m. ஸ்டுடியோஸ்’ குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய  உயரங்களை தொட்டுள்ளது.

ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அவர். இது ஒரு விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காதல் படம். P.C.ஸ்ரீராம் சார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

இந்த கதையில் காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஒளிப்பதிவு பெரிய பங்கு வகிக்கும். இதேபோல் இசையின் பங்கும் பிரதானமாக இருக்கும். அதனால் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு மிக முக்கியமானதாகவும், பேசப்படும் விஷயமாகவும் இருக்கும்.

R.D.ராஜா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல், இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். அவருக்குள் இருக்கும் அந்த அருமையான கதாசிரியர் அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு நன்றாக தெரியும்.

இளைஞர்களை மிக பெரிய அளவில் கவர்ந்துள்ள நிவின் பாலி இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். ‘பிரேமம்’ படத்தின் இமாலய வெற்றி அவருக்கு கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவில்கூட ரசிகர்களை உருவாக்கியுள்ளது.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை  விரைவில் உறுதிசெய்ய உள்ளோம். தற்போது Pre productions  பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும்..” என்றார்.

Our Score