‘சூரரைப் போற்று’, ‘தர்பார்’ திரைப்படங்களை முந்தியது ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம்..!

‘சூரரைப் போற்று’, ‘தர்பார்’ திரைப்படங்களை முந்தியது ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம்..!

2021 பொங்கலை முன்னிட்டு ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேலும் அதற்கு அடுத்த நாளான ஜனவரி 15-ம் தேதியன்று விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இதனிடையே தற்போது இந்தத் திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது,

இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம்.

புலிக்குத்தி திரைப்படம் 1 கோடியே 32 லட்சத்து 84 ஆயிரம் பார்வைகளைப் பெற, சூரரைப் போற்று திரைப்படம் 1 கோடியே 9 லட்சத்து 88 ஆயிரம் பார்வைகளைத்தான் பெற்றிருக்கிறது.

இதோடு கூடவே ஜனவரி 16-ம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தர்பார்’ திரைப்படம் 81 லட்சத்து 27 ஆயிரம் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது.

Our Score