full screen background image

தாணுவின் விளம்பர டெக்னிக்..!

தாணுவின் விளம்பர டெக்னிக்..!

சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்த ‘அரிமா நம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அபிராமி தியேட்டர் உரிமையாளர், அபிராமி ராமநாதன் கலைப்புலி தாணுவின் விளம்பர டெக்னிக் பற்றி பேசினார்.

“1984-ல் ‘யார்’ படம் எனது தியேட்டரில் வெளியானது. அதுதான் தாணு ஸார் தயாரித்த முதல் திரைப்படம். அப்போது ஒரு நாள் தியேட்டர் மேனேஜர் என்னிடம் ஓடி வந்து, ‘ஸார் தியேட்டருக்குள்ள ரெண்டு பொம்பளைங்க சாமி வந்து ஆடுறாங்க..’ என்றார்.. நானும் ஓடிச் சென்று பார்த்தேன். நிசமாகவே ஆடிக் கொண்டிருந்தார்கள். இதனை தாணுவிடம் சொன்னேன். அவர் இதை அடுத்த நாளே போஸ்டராக போட்டு தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்துவிட்டார். அதன் பின்பு கூட்டம் அள்ளிவிட்டது. இதுதான் தாணுவின் வெற்றி..” என்றார்.

தாணு ஸார்.. இந்தப் படத்துக்கு என்ன ஐடியா வைச்சிருக்காரோ தெரியலையே..?

Our Score