full screen background image

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை – வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்..!

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை – வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்..!

61-வது தேசிய விருதுப் பட்டியலில் ‘தங்கமீன்கள்’ படத்திற்கான விருதுகளைப் பெற்ற கையோடு நேற்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இயக்குநர் ராம், குட்டிப் பொண்ணு சாதனா.. பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.. தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் ஆகிய நால்வரும்..!

“இந்த விருது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதுவரைக்கும் சாதாரணமா ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறோம் என்று வரவு செலவு கணக்கு மாதிரியா இருந்த எண்ணத்தை இந்தப் படம் மாத்திருச்சு.. இனி பொறுப்பா, சமூகத்திற்குத் தேவையான படங்களைத் தயாரிக்கணும்ன்ற எண்ணமும் எனக்கு வந்திருக்கு..” என்றார் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்.

அடுத்து அவர் சொன்னதுதான் உண்மையான ஒரு தயாரிப்பாளரின் பேச்சு..

“இப்போ படம் எடுக்குறதும், விக்கிறதும் ரொம்பக் கஷ்டம்ங்க.. முன்னாடி சினிமா விநியோகஸ்தர் கைல இருந்தது. இப்போ அது தியேட்டர் ஓனர்ஸ் கைக்கு போயிருச்சு. நல்லா ஓடிக்கிட்டிருக்கிற படத்தையே ஒரே வாரத்துல ரெகுலர் ஷோல்ல இருந்து தூக்கிட்டு 2 ஷோவா மாத்திர்றாங்க.. அதுவும் ஹவுஸ்புல்லானா பெர்சண்டேஜ்படி அவங்களுக்கு 70  சதவிகிதம்.. விநியோகஸ்தர்களுக்கு 30 சதவிகிதம் வரும்.. இதுல என்ன லாபம் கிடைக்கும்னு நினைக்குறீங்க..?

சில பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் எந்தவித கியாரண்டியும் இல்லாம படத்தை வாங்கி ரிலீஸ் பண்றாங்க. மீடியம் பட்ஜெட், லோ பட்ஜெட் படத்துக்கெல்லாம் தியேட்டரே கிடைக்க மாட்டேங்குது. அப்புறம் எப்படி ஒரு நல்ல படத்தைத் தியேட்டருக்கு கொண்டு போறது..?

இதையெல்லாம் கவனிக்க வேண்டியது தயாரிப்பாளர் சங்கம்தான். ஆனா அங்கே நடக்குற வெட்டுக்குத்தையெல்லாம் நினைச்சா இன்னும் சோகமா இரு்ககு. அங்கேயே ஒற்றுமையில்லை.. அதிகமாக படம் எடுக்காதவங்கதான் இப்போ தலைமை பொறுப்புல இருக்காங்க. அதுனால அவங்களுக்கும் உண்மையான நிலவரம் தெரியலை.. நல்லா விவரம் தெரிஞ்சவங்க.. நாலைஞ்சு நல்ல விஷயத்தைச் சொன்னாலும் கூட இருந்தே அதைக் கெடுத்தர்றாங்க.

இன்னிக்கு ஏதோ அர்ஜன்ட் மீட்டிங்குன்னு சொன்னாங்க.. போய் பார்த்தா மே 11-ம் தேதி வரப் போற பொதுக்குழுல எப்படிஜெயிக்கணும்னு டிஸ்கஷனாம்.. என்னத்த சொல்றது..? வர்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப் போறாங்களாம்..? அதெல்லாம் யார் கேட்டா..? கொடுக்கட்டும்.. வேணாங்கலை.. ஆனா அதை எதுக்கு இப்படி வெளி்சசம் போட்டுக் காட்டிட்டு கொடு்க்கணும்? அது அவங்களுக்கும் அவமானமில்லையா..?

தேர்தல்ல ஜெயிக்கணும்ன்ற ஒரேயொரு குறிக்கோளை வைச்சே எல்லா விஷய்த்தையும் அணுகினால் அதுல என்ன பலன் கிடைக்கப் போகுது..? உண்மையான, நேர்மையா உழைக்கக் கூடியவங்க பொறுப்புக்கு வந்தால்தான் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்துல ஏதாவது நல்லது செய்ய முடியும். இ்லலைன்னா இனிமே வரக் கூடிய காலத்துல தயாரிப்பாளர்களெல்லாம் ஒழிஞ்சிருவாங்க..” என்று படபடப்புடன் பொரிந்து தள்ளினார்..!

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பாளர்களே.!

தேசிய விருது பெற்ற படத்தை வாங்கி விநியோகித்த ஒரு சினிமாவை நேசிக்கும் தயாரிப்பாளர் மிகவும் வருத்தப்படுகிறார்.. கொஞ்சம் உங்களது கவனத்தை இந்தப் பக்கமும் திருப்புங்களேன்..!

Our Score