full screen background image

“இந்தப் படத்தை வெளியிடுவது எனக்குக் கிடைத்த பெருமை…” – தயாரிப்பாளர் S.R.பிரபுவின் பெருமிதம்..!

“இந்தப் படத்தை வெளியிடுவது எனக்குக் கிடைத்த பெருமை…” – தயாரிப்பாளர் S.R.பிரபுவின் பெருமிதம்..!

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2’

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பெங்களூரூவில் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின் நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

கே.ஜி.எஃப்.-சாப்டர்-2’ முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோம்பாலே பிலிம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.

இந்தப் பிரம்மாண்டமான விழாவில், கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

‘கே.ஜி.எப்.சாப்டர்-2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் இந்தப் படத்தைத் தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “இந்த ‘கே.ஜி.எஃப்.-சேப்டர்-2 படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படத்தை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கௌரவம். இந்தப் படம் நாடு முழுவதும் பெரியதொரு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. யஷ் கடினமாக உழைத்து, அருமையான படைப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கான வெற்றியாக இந்த படம் அமையும்…” என்றார்.

Our Score