நடிக்க வருகிறார் தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர்..!

நடிக்க வருகிறார் தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர்..!

நடிகர்களும் நடிக்க வந்தாங்க.. அப்புறம் இயக்குநர்களும் நடிக்க வந்தாங்க.. அப்புறம் இசையமைப்பாளர்களும் நடிக்க வந்தாங்க.. அப்புறம் தயாரிப்பாளர்களும் நடிக்க வந்தாங்க.. இன்னும் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள்தான் பாக்கி..

சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன், மோகன் வி.நடராஜன், பிரமிட் நடராஜன், ஜெயப்பிரகாஷ், ஞானவேல், காஜா மொகைதீன் இவர்களது வரிசையில் இன்னுமொரு தயாரிப்பாளரும் நடிக்கப் போறாராம்..

இயக்குநர் விஷ்ணுவர்த்தன், மற்றும் நடிகர் கிருஷ்ணா இவர்களது தந்தையும், தயாரிப்பாளருமான ‘பட்டியல்’ சேகர், ‘ராஜதந்திரம்’ என்கிற படத்தில் நடிக்கவிருப்பது தற்போதைய  கோடம்பாக்கச் செய்தி.

வில்லனா, குணச்சித்திர ரோலான்னு இதுவரைக்கும் தெரியலை. ஆனா திரைல முகம் காட்டப் போறது உறுதியாம்.. இனிமே நடிகர்கள்பாடு திண்டாட்டம்தான்.. இன்னும் ஏவி.எம்.சரவணன் ஸாரும் வந்துட்டாருன்னா பட்டியல் முடிஞ்சிரும்..!

வாழ்த்துகள் பட்டியல் சேகர் ஸாருக்கு..!

Our Score