திரைப்படங்களின் உரிமம் தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், சன் தொலைக்காட்சி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘பொக்கிஷம்’, ‘நான் அவன் இல்லை-2’, ‘வன்மம்’, ‘மீகாமன்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக். இவர் பல முக்கிய பழைய தமிழ்த் திரைப்படங்களின் உரிமங்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்திருக்கிறார்.
தற்போது சில குறிப்பிட்ட 81 திரைப்படங்களின் உரிமம் குறித்து தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கிற்கும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாம். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் டிவி மீது நேமிசந்த் ஜபக் வழக்கு தொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வக்கீல் நோட்டீஸ் இது: