“ஜிகர்தண்டா’வை ஹிந்தியில் நானே தயாரிக்கப் போகிறேன்”-தயாாிப்பாளர் கதிரேசன் அறிவிப்பு..

“ஜிகர்தண்டா’வை ஹிந்தியில் நானே தயாரிக்கப் போகிறேன்”-தயாாிப்பாளர் கதிரேசன் அறிவிப்பு..

சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய பேசப்பட்டு வருகிறது. பெருந்தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்றெல்லாம் செய்திகள் கடந்த இரு நாட்களாக பரவி வந்தன.

இது அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பேட்டியளித்திருக்கிறார் இதன் தயாரிப்பாளர் கதிரேசன்.

“ஜிகர்தண்டா படம் வெளியான இந்த இரண்டாவது வாரத்தில் மேலும் 60 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. இதுவே இப்படத்திற்கு வசூல் கூடுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்..

படம் வெளியானதிலிருந்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது ‘ஜிகர்தண்டா’. திரைத்துரையிலிருந்தும் பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் படத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை இந்தியில் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் முன் வந்தன. இப்போது படத்தின் ரீமேக் உரிமையைக் கொடுக்காமல் நானே அவர்களுடன் இணைந்து ‘ஜிகர்தண்டா’ படத்தை இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

மேலும், ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கையும், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறேன்…” என்று கூறியுள்ளார் கதிரேசன்.

நீண்ட நாட்கள் கழித்து ஹிந்திக்கு செல்லும் கோடம்பாக்கத்து தயாரிப்பாளர் என்கிற பெருமையைப் பெறுகிறார் கதிரேசன்..

வாழ்த்துகள் ஸார்..!

Our Score