தமிழ்த் திரையுலகில் திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் பெரும் பாலமாகவும், பலமாகவும் திகழும், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் எனப்படும் பி.ஆர்.ஓ.க்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறும். அந்த வகையில் இன்றைக்கு அந்தச் சங்கத்தின் சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தமே 55 உறுப்பினர்கள் இருப்பதாலும் கலந்தாலோசித்து ஒருமித்த குரலோடு நிர்வாகிகளை தேர்வு செய்வோம் என்றெண்ணி கடந்த ஒரு மாத காலமாகவே தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
அப்படியிருந்தும் தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே எதிர்ப்பில்லாமல் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்ததாம். மற்ற பதவிகளுக்கு போட்டியைத் தவிர்க்க முடியவி்லலை.
தலைவராக முன்னாள் தலைவர் திரு.விஜய முரளியும், பொருளாளராக திரு.மெளனம் ரவியும் ஒருமித்தக் குரலோடு தேர்வு செய்யப்பட்டார்கள்..
மற்ற பதவிகளான செயலாளர் மற்றும் துணைத் தலைவர், இணைச் செயலாளர், பதவிகளுக்கு போட்டிகள் இருந்ததால் அதற்கான தேர்தல் இன்றைக்கு நடத்தப்பட்டது.
தேர்தல் முடிவின்படி சங்கத்தின் செயலாளராக தற்போதைய செயலாளர் திரு.பெருந்துளசி பழனிவேல் தேர்வாகியுள்ளார். துணைத் தலைவர்களாக திரு.என்.சங்கரலிங்கம், திரு.கோவிந்தராஜ் இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். இணைச் செயலாளர்களாக திரு.கணேஷ்குமார், திரு.வெங்கட் இருவரும் தேர்வாகியுள்ளனர்.
புதிய நிர்வாகத்தின் செயற்குழு உறுப்பினர்களாக திரு.வி.எம்.ஆறுமுகம், திரு.இனியன் ராஜன், திரு.மேஜர் தாசன், திரு.கிளாமர் சத்யா, திரு.ரியாஸ் கே.அகமது, திரு.நிகில் முருகன், திரு.செல்வ ரகு, திரு.துரைப்பாண்டி, திரு.மதிஒளி சண்முகம் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்கள்.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!