full screen background image

அல்போன்ஸ்புத்திரனின் புதிய படத்தில் பிருத்விராஜுடன் நடிக்கிறார் நயன்தாரா..!

அல்போன்ஸ்புத்திரனின் புதிய படத்தில் பிருத்விராஜுடன் நடிக்கிறார் நயன்தாரா..!

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தப் படத்தில் பிருத்விராஜூம், நயன்தாராவும் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது.

இதுவரையிலும் ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தப் படம் என்ன என்று கேட்டு மலையாளத் திரையுலகமே காத்திருக்கிறது.

இந்தச் சூழலில் தான் பகத் பாசில்-நயன்தாரா கூட்டணியில் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், அதற்கு ‘பாட்டு’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த மாதம் திடீரென்று தான் பகத் பாசில் படத்துக்கும் முன்பாக பிருத்விராஜுடன் இணைந்து ஒரு படம் செய்யவிருப்பதாக அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்திலும் நயன்தாராதான் ஜோடியாம். இதனை பிருத்விராஜே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடக் கடைசியில் நடந்து அடுத்த வருடத் துவக்கத்தில் படம் வெளியாகும் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் தனது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.

தற்போதைக்கு மலையாளத் திரையுலகத்தில் அதிகப் படங்களில் நடித்து வருவது நடிகர் பிருத்விராஜ்தான். கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருகிறார். பிருத்விராஜின் கடைசியான இரண்டு படங்களான ‘கோல்டு கேஸ்’ மற்றும் ‘குருதி’ இரண்டுமே ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
Our Score