full screen background image

பிஸினஸ் பார்ட்னர் மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்திருக்கும் பாலியல் புகார்..!

பிஸினஸ் பார்ட்னர் மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்திருக்கும் பாலியல் புகார்..!

இன்றைக்கு பாலிவுட்டை ஏன் இந்தியாவையே திகைப்பில் ஆழ்த்தியிருக்கும் ஒரு செய்தி பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது பிஸினஸ் பார்ட்னரும், தனது நீண்ட நாள் நண்பருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்திருப்பதுதான்.

ness_preity

நெஸ் வாடியாவும், ப்ரீத்தி ஜிந்தாவும் நீண்ட நாள் காதலர்கள். கிட்டத்தட்ட 6 வருடங்களாக இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருவதாக மும்பை பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை அவர்களும் இப்போதுவரையிலும் மறுத்ததில்லை. ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமானபோது நெஸ் வாடியா பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை விலைக்கு வாங்க முயற்சித்தபோது ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் பார்ட்னராகிவிட்டார்.

நெஸ்ஸி வாடியாவும் சாதாரணமானவரில்லை. பாகிஸ்தானின் தந்தையான முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரன். ‘பாம்பே டையிங்’ என்கிற இந்தியாவின் மிகப் பெரிய துணி சாம்ராஜ்யத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘வாடியா குரூப்’ நிறுவனமும் இவர்களுடையதே..! இவருடைய குடும்பம்தான் ‘கோ ஏர்’ என்ற ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. ‘பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் பெரும் பங்குதாரர்களில் இவரும் ஒருவர்.

நல்லாத்தான போய்க்கிட்டிருந்தது என்று நம்ம சவலைப் பிள்ளைகளே சந்தேகப்படும் அளவுக்கான பல செய்திகள் இந்த புகார் மனுவுக்கு பின்புறத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடேஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது தன்னை மானபங்கப்படுத்த முயற்சித்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும், மரியாதைக் குறைவாக மிரட்டியதாகவும் நெஸ் வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

நெஸ் வாடியாவை தனது ஆண் நண்பர் என்ற வட்டத்தில் இருந்து தான் நீக்கிவிட்டதாகவும், இப்போது அவர் தனது பிஸினஸ் பார்ட்னர் என்ற வகையில் மட்டுமே தன்னுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ப்ரீத்தி. அன்றைக்கு ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் முன்னிலையில் தன்னைக் கட்டிப் பிடித்து இம்சை செய்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ப்ரீத்தியின் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீஸ் நெஸ் வாடியா மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனாலும் ப்ரீத்தி தனது வாக்குமூலத்தை அளிக்காமல் தான் உடனடியாக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் திரும்பி வந்து வாக்குமூலம் அளிப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

ப்ரீத்திக்கும், நெஸ் வாடியாவுக்கும் நீண்ட நாட்களாக நடந்து வந்த பனிப்போரின் முடிவுதான் இன்றைய பாலியல் புகார் என்கிறது மும்பை மீடியா மற்றும் பிஸினஸ் வட்டாரம்.

உண்மையென்னவில் நெஸ் வாடியாவின் பார்வை வேறொரு பெண்ணின் மீது விழுந்துவிட்டதாகவும், அந்தப் பெண்ணுடன் நெஸ் வாடியா இருக்கும்போது ப்ரீத்தி அதனைப் பார்த்துவிட்டதாலேயே வாடியா மீதான தனது உறவைத் துண்டித்துக் கொண்டதாகச் செய்திகள் வந்துள்ளன..!

மேலும் ஐபிஎல் போட்டி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை நிர்வகிப்பது, கணக்கு வழக்குகள் தொடர்பாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென்று ப்ரீத்தி இது போன்று புகாரை அளித்திருப்பதாக நெஸ் வாடியா தரப்பில் கூறுகின்றனர்.

இந்தப் புகாரைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியாகியுள்ளார் நெஸ் வாடியா. “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அன்றைய போட்டி தினத்தன்று அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்ற முறையில் தான் மைதானத்தில் இருந்ததாகவும், உடன் இன்னொரு உரிமையாளர் என்ற முறையில் ப்ரீத்தி இருந்ததும் தவறில்லையே.. அவருடன் பேசியதும், வெற்றியைக் கொண்டாடியதும் தப்பில்லையே..? அப்போதெல்லாம் அமைதியாக இருந்தவிட்டு 15 நாட்கள் கழித்து புகார் கொடுப்பதன் மர்மம் என்ன..?” என்கிறார் நெஸ் வாடியா..!

“நெஸ் வாடியாவுடனான தனது உறவை முறித்துக் கொள்ள ப்ரீத்தி ஜிந்தா சீப்பான இந்த முறையைக் கையாண்டிருக்கக் கூடாது..” என்கிறார்கள் நெஸ் வாடியாவின் நண்பர்கள்..!

ஆனால் ப்ரீத்தியோ.. தனிப்பட்ட முறையில் நெஸ் வாடியா தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இந்தப் புகாரை கொடுத்துவிட்டு பத்திரிகையாளர்களிடத்தில், “இது எனக்கொரு சிக்கலான நேரம். மீடியாக்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும். நான் யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்து இதனைச் செய்யவில்லை. ஆனால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்திருக்கிறேன்.. அவ்வளவுதான்..” என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.

உண்மையென்ன என்பது யாருக்குத் தெரியும்..?

Our Score