தயாராகி வருகிறது பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில்..!

தயாராகி வருகிறது பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி வரும் 'உன் சமையலறையில்' என்ற படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆஷீக் அபு இயக்கிய 'சால்ட் அண்ட் பெப்பர்' என்ற படத்தின் ரீமேக்குதான் இந்தப் படம். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சிநேகா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஊர்வசி, பூர்ணா, ரெஜினா கஸண்டரா, தம்பி ராமையா, இளங்கோ குமாரவேல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ப்ரீதா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிஷோர் எடிட்டிங் செய்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்திற்காக பிரகாஷ்ராஜ் தனக்கு வந்த பல மொழி படங்களின் வாய்ப்புகளையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.. அவருடைய தயாரிப்புகளில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தன.

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பில் இதுவரையில் வெளிவந்த படங்களனைத்தும் தரமானவை என்பதால் இவர் இயக்கியிருக்கும் 'உன் சமையலறையில்' படத்தை அவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தென்னக சினிமா..!