‘பிரகாமியம்’ என்ற பெயரில் புதிய தமிழ்ப் படம்

‘பிரகாமியம்’ என்ற பெயரில் புதிய தமிழ்ப் படம்

நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினரும், நடிகருமான வேலூர் வாசுதேவன் தயாரித்திருக்கும் புதிய படம் 'பிரகாமியம்.'

இந்தப் படத்தில் புதுமுகமான பிரதாப் ஹீரோவாகவும், சுபா, பார்வதி என்ற இரண்டு ஹீரோயின்களும் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளான  ஒரு இளைஞனின் கதைதான் இந்தப் படம்.

ஒளிப்பதிவு – பி.முத்துப்பாண்டியன், இசை - ராஜ் & கிறிஸ்டோபர், படத் தொகுப்பு  -கார்த்திக் மனோரமா, தயாரிப்பு மேற்பார்வை - தென்னாபுரம் ராஜ்குமார், தயாரிப்பு  - கே.சுமித்ரா, இயக்கம்  - பிரதாப்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடைபெற்றது. படத்தின் இசை மற்றும் டிரெயிலரை நடிகர் சங்கத் தலைவர், டாக்டர்  நாசர் வெளியிட, பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால், மற்றும் பொருளாளரும், நடிகருமான கார்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில்  நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்களான  டி.பி. கஜேந்திரன், சோனியா போஸ், ராம்கி, நந்தா, தளபதி தினேஷ், ஸ்ரீமன், ஹேமாசந்திரன், பிரேம்குமார், ரமணா, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.