மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகியுள்ளது ‘பிரகாமியம்’ திரைப்படம்
இந்தப் படத்தில் பிரதாப், பார்வதி, சுபா, ரகுமான், வேலூர் வாசுதேவன், ஆரணி A.D. மனோ, துரை மாமது ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – P.முத்துப் பாண்டியன், படத் தொகுப்பு – கார்த்திக் மனோரமா, இசை – ராஜ், தயாரிப்பு – K. சுமித்ரா, மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – N.A.நாதன், தயாரிப்பு நிர்வாகம் – வேலூர் வாசுதேவன், இயக்குநர் – பிரதாப்.
இதுவொரு சைக்காலஜிக்கல் காதல், ஆக்சன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ஆனால் பாடல்களும், காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொல்வது. இது அம்மா செண்டிமெண்ட் உள்ள படம், ஆனால் தாய்மார்களை போற்றும் கவிதையோ, பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் படம்.
தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள்.. அரசாங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தப்படுத்தி கருத்து சொல்லும் படம். மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ் மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம் ‘பிரகாமியம்’.
உளவியலை அடிப்படையாக கொண்ட படம். சமூகத்தில் உள்ள அடிப்படை சிக்கல்களை தத்துவார்த்தமாக தீர்க்கும் வழியைச் சொல்கிறது. ‘அன்பும் அரவணைப்பும்’ அதற்கு ஒரு அற்புத கருவி என்பதையும் சொல்லும் படம். அஷ்டமா சித்திகளில் உள்ள ஒரு கலையின் சாதக பாதகங்களை வெகு நுட்பமாக கையாண்டுள்ள படம்.
கலை படம், ஆவணப் படம், கமர்ஷியல் படம் என இந்த மூன்றும் கலந்த கலவை இது. புதிய யுத்திகளின் கலவையாக உருவகியுள்ள இப்படம் படம் Art – doccial படமாக உருவாகி உள்ளது.
நடனக் காட்சிகள், ஆக்சன் காட்சிகள் இல்லாமலும், எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ இல்லாத படமும்கூட. ஆனாலும் படத்திற்கு சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
“இந்தப் படம் பார்ப்பவர்களின் மனதில் உளவியல் ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்விதமான திரைக்கதையுடன் இருப்பதால்தான் இது ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதாக…” சென்சார் அலுவலகத்தில் கூறியிருக்கிறார்கள்.
வரும் ஜனவரி 20-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.












