‘ராதே ஷியாம்’ படத்தில் ‘விக்ரமாதித்யா’ கேரக்டரில் நடித்திருக்கும் பிரபாஸ்..!

‘ராதே ஷியாம்’ படத்தில் ‘விக்ரமாதித்யா’ கேரக்டரில் நடித்திருக்கும் பிரபாஸ்..!

வம்சி, பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ராதே ஷியாம்.’

இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் சிறப்பு டீசர் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று வெளியாகிறது.

பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா’ குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும்.

அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். ‘விக்ரமாதித்யா யார்?’ என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் வரும் 2022, ஜனவரி 14-ம் தேதியன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

Our Score