தமிழ்த்திரை என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் ‘பிரபா’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இதுவொரு த்ரில்லர் டைப் திரைப்படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இதில் நடிகர்களாக, தொழில் நுட்ப கலைஞர்களாக பல புதுமுகங்கள் அறிமுகமாகவுள்ளனர்.
கதாநாயகனாக – விஜயராம், வில்லனாக – ரஜினிபாணி, போலீஸ் அதிகாரிகளாக – G. ராஜ் / ‘போட்டோ சயின்ஸ்’ரமேஷ், குழந்தை நட்சத்திரமாக –‘பேபி’ தமிழிசை, ஒளிப்பதிவாளராக – S. முத்துராமலிங்கம், இசையமைப்பாளராக – S.J. ஜனனி, ஆர்ட் டைரக்டராக – டிஜே, பாடலாசிரியர்களாக – மா. மதிமாறன் / ஸ்ரீதேவி / சபிதா போஜன், பாடகியாக – சவுமியா தணிக்காசலம், காஸ்ட்யூம் டிசைனராக – தேன்மொழி நந்தன், இவர்களுடன் ‘தென்றல்’ சரவணன், ‘ஆடிட்டர்’ ஜெரால்டு ஆகியோரும் அறிமுகமாகின்றனர்.
மேலும், சொற்கோ, ரமேஷ் வைத்யா இருவரும் பாடல்களை எழுதி இருக்கின்றனர். V.சத்தியநாராயணன் எடிட்டிங் செய்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இணை தயாரிப்பு – ரஜினிபாணி, N. முருகன். இயக்குனர் தரணியின் உதவியாளர் நந்தன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார்.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் நந்தன் கூறும்போது, “இது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம். பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான படம். பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து வெளியே வர மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாமல் பெண்களே போராடி வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது.
இதுவரை குடும்ப்ப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை சுவாசிகா, இந்த ‘பிரபா’ திரைப்படத்தில் நவநாகரீகப் பெண்ணாகவும், முற்போக்கான சிந்தனையுள்ள பெண்ணாகவும், ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இது அவருக்கும், எங்களின் குழுவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.