full screen background image

“என் வளர்ச்சி சந்தானத்திற்கு பிடிக்கவில்லை..” – பவர் ஸ்டார் சீனிவாசனின் வருத்தம்..!

“என் வளர்ச்சி சந்தானத்திற்கு பிடிக்கவில்லை..” – பவர் ஸ்டார் சீனிவாசனின் வருத்தம்..!

நேற்றுதான் ‘தொப்பி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரி்பபாளர்களை குறை சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.

இன்றைக்கு நடிகர் சந்தானத்தைக் குறை சொல்லி பேட்டியளித்திருக்கிறார்.

‘தி இந்து’ நாளிதழின் இணைய இதழுக்கு அளித்திருக்கும் வீடியோ பேட்டியில் சந்தானம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ‘பவர் ஸ்டார்’ சந்தானத்தை கடுமையாக சாடியிருக்கிறார்.

‘பவர் ஸ்டார்’ தன் பேட்டியில், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தோடு சந்தானம் என்னை கழட்டி விட்டுவிட்டார். என்னுடைய வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. எல்லா இடத்திலும் என்னை டம்மியாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

‘யா யா’ என்று ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அதில் அவர் என்னுடன் நெருக்கமாக நடிக்கவில்லை. போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தைப் போடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில்கூட ஒரு காட்சிதான் கொடுத்தார். அப்போதுகூட என்னை சந்திக்க மறுத்துவிட்டார். சந்தானம் நல்லவர்தான், ஆனால் அவருடன் இருப்பவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ‘பவருக்கு சப்போர்ட் பண்ணாதே, அவர் வளர்ந்துவிடுவார்’ என்று தடுக்கிறார்கள்..” என்று சொல்லியிருக்கிறார்.

“சந்தானம் உங்களுக்கு போட்டியாளர் என்று சொல்லலாமா..?” என்கிற கேள்விக்கு பதிலளித்த ‘பவர் ஸ்டார்’, “எனக்கு போட்டி என்றால் அது ரஜினிதான். ரஜினி ஏன் போட்டி என்றால் அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். அவரைப்போல் நானும் வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். எனக்கு எதிரி என்று யாருமே கிடையாது. சினிமாவில் நான் வளரக் கூடாது என்று நினைக்கிற முதல் ஆள் சந்தானம்..” என்றார்.

எப்படியும் அடுத்த ரவுண்டை சந்தானமே துவக்குவார் என்று எதிர்பார்க்கலாம்..!

 

Our Score