இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பவுடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம் புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீஜி, இசை(கிளிம்ப்ஸ்) – லேயண்டர் லீ மார்ட், ஒளிப்பதிவு – பிரஹத் முனியசாமி(கிளிம்ப்ஸ்), மக்கள் தொடர்பு – நிகில் முருகன், படத் தொகுப்பு – குணா, கலை இயக்குநர் – சரவணா, சண்டை இயக்கம் – விஜய், உடைகள் – வேலவன், புகைப்படங்கள் – ராஜா, சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ, ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார், ஒலிக்கலவை – நவீன் ஷங்கர், டிஐ வண்ணம்: வீரராகவன், வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ், தயாரிப்பு மேலாளர் – சரவணன், தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா, தயாரிப்பாளர் – ஜெயஸ்ரீ விஜய், கோவை எஸ்.பி.மோகன்ராஜ், ஆடியோ லேபிள் – டிவோ.
கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் இந்தப் ‘பவுடர்’ படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியான என்.எம்.ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நிகில் முருகன் நடித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ‘வலிமை’ படத்தைத் திரையிடும் அரங்குகளில் ‘பவுடர்’ படத்தின் கிளிம்ப்ஸூம் திரையிடப்பட்டது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை இந்தக் கிளிம்ப்ஸ் காட்டுகிறது.
தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.