full screen background image

‘போர் தொழில்’ படத்தின் டீசர் வெளியானது!

‘போர் தொழில்’ படத்தின் டீசர் வெளியானது!

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும்  பரபரப்பான திரில்லர் திரைப்படமான ‘போர் தோழில்’ வரும் ஜூன் 9-ம் தேதியன்று திரைக்கு வர உள்ளது.

இந்த ‘போர் தொழில்’ திரைப்படத்தை, E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான இந்தப் படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.

கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது அந்த டீசர்.  

வன்முறைகள் மிகுந்த இந்த இருண்ட உலகில்,  ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து  பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது பணியில், மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.

அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றி பெற,  அவருக்கு நேரெதிர் குணம் கொண்ட ஒரு  மூத்த காவலருடன் இணைய வேண்டிய கட்டாயம். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தங்களது மன வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் இறங்குகிறார்கள்.

இந்த வேட்டை பயணத்தில் வென்றார்களா.. இல்லையா… என்பதுதான் இந்த பரபர திரில்லர் கலந்த ஆக்சன் படத்தின் கதையம்சம்.

அதிரடி ஆக்சனுடன் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும் இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Our Score