full screen background image

விவசாயத்தின் பெருமையைப் பேச வரும் அருமையான படம் ‘பூர்வீகம்’!!

விவசாயத்தின் பெருமையைப் பேச வரும் அருமையான படம் ‘பூர்வீகம்’!!

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R.முருகானந்த்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பூர்வீகம்’. 

இப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் – டாக்டர் R.முருகானந்த், எழுத்து,  இயக்கம் – G. கிருஷ்ணன் D.F.Tech, ஒளிப்பதிவு – விஜய் மோகன் D.F.Tech, இசை – சாணக்யா, படத் தொகுப்பு – சங்கர்.K, பாடலாசிரியர் – ஏகாதசி, கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன்,  பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், K.பார்த்திபன், G.அமிர்தவர்ஷினி, டாக்டர் R.முருகானந்த், நிர்வாக தயாரிப்பாளர் – K.சந்தோஷ், பத்திரிக்கை தொடர்பு – செல்வரகு (Vistas Media).

நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம். இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் முழுமையாக இடம் பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

நகரத்திற்கு இடம் பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி  தள்ளிவிட்ட  விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R.முருகானந்த் பேசும்போது, “இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும். ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.

மேலும்… படித்தவனோ பாமரனோ… அரசனோ.. ஆண்டியோ, யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் இந்த ‘பூர்வீகம்’ என்ற திரைப்படத்தில் வெகு ஆழமாக கூறியுள்ளோம்” என்றார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டை மிக வித்தியாசமான மண்ணின் மைந்தர்கள்   விவசாயிகளை வைத்து, படக் குழுவினர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் முழுப் பணிகளும் முடிந்த நிலையில், திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

விரைவில் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score