குத்தாட்டம் ஆடவும் தயார் – நடிகை பூஜாவின் அறிவிப்பு..!

குத்தாட்டம் ஆடவும் தயார் – நடிகை பூஜாவின் அறிவிப்பு..!

2003-ம் ஆண்டில் ‘ஜே ஜே’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான பூஜா இதுவரையில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆனாலும் தமிழில் பெயர் சொல்வது போல அவருக்குக் கிடைத்தது ‘நான் கடவுள்’, ‘விடியும் முன்’ படங்கள் மட்டுமே..!

ஆனால் இன்னொரு விஷயத்தில் அம்மணி ரொம்ப பேமஸ்.. சினிமா ஹீரோக்கள் வட்டாரத்தில் அனைவரிடமும் அன்னியோன்யமாக பழகி, வாடா போடா என்று பேசுவது.. கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது.. என்று இவருடைய ஸ்டைல்தான் இவருடைய பெயரை கோடம்பாக்கத்தில் ஹீரோயின் அந்தஸ்தைவிடவும் பிரபலப்படுத்தியிருக்கிறது..!

இதைப் பற்றி பூஜா சொல்வது என்ன..?

“என்னைப் பற்றி காதல், கல்யாணம் என்று வதந்தி பரவுவது வாடிக்கையாகி விட்டது. மேலும், நான் எனது நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வேன். அவர்களை கலாய்ப்பேன். வாடா போடா என்று ஜாலியாக பேசுவேன். எனக்கு அவர்கள் மீது அதிக அன்பு ஏற்படும்போது அவர்களுக்கு முத்தம் கொடுத்து எனது அன்பை வெளிப்படுத்துவேன். இது எனது சுபாவம்.

அதை நான் பரபரப்பு கூட்டுவதற்காக செய்வதில்லை. எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்களாக இருந்தால், என் பாணியில் முத்தம் கொடுப்பேன். இதை நான் எப்போதுமே செய்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, உள் ஒன்று, புறம் ஒன்று பேசும் பழக்கமும் எனக்கு இல்லை. உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் உதட்டிலும் வரும். எனது இந்த குணம் தெரிந்து கொள்ளும் எனது நண்பர்கள், நான் என்ன பேசினாலும் அவதை தவறாகவே நினைப்பதில்லை. அவர்களே அப்படி பேசுவதற்கு எனக்கு சுதந்திரம கொடுத்து விடுகிறார்கள்…” என்கிறார் பூஜா.

“முன்பு போல அதிகப் படங்களில் நடிப்பதில்லையே…” என்று கேட்டால் மிக நீ்ண்ட விளக்கமே கொடுத்திருக்கிறார் பூஜா..!

“கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற வட்டத்தைவிட்டு இப்போது நான் வெளியேறி விட்டேன். 33 வயதாகிவிட்ட நான் இனிமேலும் டூயட் பாடும் நடிகையாகத்தான் நடிப்பேன் எனறு சொல்வது நியாயமில்லை என்பது எனக்கே தெரியும். வித்தியாசமான வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பேன்.

இனிமேல் வாய்ப்பு வந்தால் குத்தாட்டமும் ஆடுவேன். காரணம், தற்போது மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளே அயிட்டம் பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.

ஆனால் என்ன காரணமோ தெரியலை.. இதுவரை எந்த டைரக்டரும் குத்துப் பாட்டுக்கு ஆடுவது சம்பந்தமாக என்னிடம் கேட்டதே இல்லை. நான் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு தடை போட்டு நடித்து வந்ததால், இவர் அதுக்கு செட்டாக மாட்டார் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ…?” என்கிறார் பூஜா…

அயிட்டம் ஆட்டத்துக்கு தான் ரெடி என்கிறார் பூஜா. எந்த இயக்குநர் சான்ஸ் கொடுக்கிறார் என்று பார்ப்போம்..!

Our Score