full screen background image

கார்த்திக்கு ஜோடி திரிஷாவா..? ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திர ரகசியம்

கார்த்திக்கு ஜோடி திரிஷாவா..? ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திர ரகசியம்

தமிழகத்தின் தலை சிறந்த வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே..!

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.

கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், திரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம், அதிதி ராவ் ஹைதாரி, ஐஸ்வர்யா லஷ்மி, சோபியா துலிசலா, மோகன்ராம், நிழல்கள் ரவி, பிரகாஷ்ராஜ் என்று பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

இதில் யார், யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு தமிழகமே துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தப் படத்தின் கதாபாத்திர நடிகர், நடிகைகள் யார், யார் என்பதை போஸ்டர் வடிவத்தில் படக் குழு வெளியிட்டுள்ளது.

சுந்தர சோழனாக.. அதாவது ராஜராஜசோழனின் தந்தையாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ராஜராஜசோழன் என்னும் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார். வந்தியத் தேவனின் மனைவி குந்தவையாக த்ரிஷா நடிக்கிறார். ராஜராஜ சோழனின் முதல் மனைவியான வானதியாக ஷோபிதா நடிக்கிறார். பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். 

சுந்தர சோழனின் முதன்மைத் தளபதியான பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், இவரது தம்பி சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபனும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையரின் காதலியான நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சின்ன வயது நந்தினியாக பேபி ஆர்ட்டிஸ்ட்டான சாரா நடித்திருக்கிறார். ராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார். ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் நடிக்கிறாராம்.

மேலும் அநிருத்தப் பிரம்மராயராக பிரபு, கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், சோமன் சாம்பவனாக ரியாஸ்கான், அமுதனாக அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகச் சோழனாக அர்ஜூன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரகுமான், குடந்தை ஜோதிடராக மோகன்ராமும் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Our Score