full screen background image

‘பொன்னியின் செல்வன்-1’ படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது

‘பொன்னியின் செல்வன்-1’ படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்காக, இயக்குநர் மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ்’ தயாரித்து வரும் பிரம்மாண்டமான சரித்திரப் படைப்பு பொன்னியின் செல்வன்.’

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோஷிபாத துலிபலா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரகுமான், விக்ரம் பிரபு, அஸ்வின் காகமனு, விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், மோகன்ராம், அர்ஜூன் சிதம்பரம், பாபு ஆண்டனி, வினோதினி, பாலாஜி சக்திவேல், பார்த்திபன் மற்றும் பல தென்னிந்திய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவிவர்மன், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, படத் தொகுப்பு – கர்பிரசாத், கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல், வசனம் – ஜெயமோகன், பாடல்கள் – இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவ ஆனந்த், கிருத்திகா நெல்சன், சண்டை இயக்கம் – ஷாம் கெளஸல், திலீப் சுப்பராயன், கெச்சா கம்பாக்டீ, நடன  இயக்கம் – பிருந்தா, உடைகள் – ஏகோ லகானி, ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட், நகைகள் – கிரிஷ்ணதாஸ் அண்ட் கோ, விளம்பரம் – ராகுல் நந்தா, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், VFX – NYVFXWALLAH, DI – Red Chillies Entertainment, தயாரிப்பு நிர்வாகம் – சிவ ஆனந்த், தயாரிப்பு – சுபாஷ்கரன், மணிரத்னம், இயக்கம் – மணிரத்னம்.

இந்தப் படத்தின் படபிடிப்பு இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்போடு இந்த பொன்னியின் செல்வன்-1’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்தது என்று நேற்று படக் குழு அறிவித்தது.

*பல தலைமுறைகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின் செல்வன்” எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர். பலரும் இதை படமாக்க நினைத்து முடியாமல் போனது. ஆனால் அதை முடித்துக் காட்டிள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குகிறார் என்றதும், படம் ரிலீஸூக்கு முன்பேயே அந்த நாவலை படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பல தமிழர்கள் இந்த நாவலை மும்முரமாக படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இப்படி ஒரு படம் இனிமேல் தமிழ்ச் சினிமாவில் அமையவே அமையாது.. அதை எடுக்கவும் முடியாது.. அதற்கு வாய்ப்பே இல்லை.. இதை மணிரத்னம்தான் செய்ய முடியும்.. படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்..” என்று இதில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருமே சொல்கிறது மேலும் வியப்பை தருகிறது.

படத்தின் எதிர்பார்ப்பும் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

Our Score