பொங்கலன்று கலக்கப் போகும் ‘பொங்கல்’ பற்றிய திரைப்படப் பாடல்..!

பொங்கலன்று கலக்கப் போகும் ‘பொங்கல்’ பற்றிய திரைப்படப் பாடல்..!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சேனல்களிலும் ஒரு படத்தில் இடம் பெறும் ‘பொங்கல்’ பற்றிய பாடல் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ‘உள்ளம் உள்ளவரை’.

பொங்கல் பண்டிகையை குறிப்பிடுவதுபோல ஏதேதோ பாடல்கள் ஒளிபரப்பாகும். ஆனால் அன்றைக்கு பரிமாறப்படும் உணவான ‘பொங்கல்’ பற்றிய பாடல் இருக்காது. அக்குறையைப் போக்கும் விதமாகவும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் புரோமோ போலவும் இப்பாடல் உருவாகியுள்ளது.

இந்துஜா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த ‘உள்ளம் உள்ளவரை’. படத்தை விஷ்ணுஹாசன் இயக்குகிறார்.

இந்த ‘பொங்கல்’  பாடல் பற்றி இயக்குநர் விஷ்ணுஹாசன் கூறும்போது, ”திகில் படம் என்பதால் படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒன்று டாஸ்மாக் பாரில் பாடும் பாடல். இன்னொன்று பொங்கலின் பெருமையைப் பாடும் பாடல்.

‘பொங்கல்’ பற்றிய பாடல் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. இந்தப் பாடல் அந்தக் குறையைப் போக்கும்படி இருக்கும். கவிஞர் சினேகன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். விஜய் ஏசுதாஸும், ஸ்வேதா மோகனும் பாடியுள்ளனர். சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

‘சர்க்கர பொங்கல்.. கன்னிப் பொங்கல்.. இது காணும் பொங்கல்..  காதல் பொங்கல்’ என்கிற இந்தப் பாடல் வரும் பொங்கலன்று அனைத்து டி.வி. சேனல்களிலும் ஒளிபரப்பாகி கலக்கப் போகிறது…” என்றார்.

Our Score