பெண்களுக்கு ஆதரவாகப் பேசும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்..!’

பெண்களுக்கு ஆதரவாகப் பேசும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்..!’

பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ்-கே.ஆர்.கண்ணன், அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம்  ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.A. ராமகிருஷ்ணன். கதாநாயகிகளாக ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –     M.V.பன்னீர்செல்வம்

இசை    –    கண்ணன்

பாடல்கள்    –   அண்ணாமலை

எடிட்டிங்  –    வசந்த் அய்யப்பன்

கலை   –   மோகன்

நடனம்    –    பாஸ்கர்

தயாரிப்பு நிர்வாகம் –  மார்ட்டின் – பாண்டியன்

தயாரிப்பு மேற்பபார்வை  –   செந்தில்

தயாரிப்பு     –     கே.ஆர்.கண்ணன்.

இயக்குநர் ராமகிருஷ்ணன் படம் பற்றிச் சொல்லும்போது “பெண்கள் பலமும், பலவீனமும் ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றுவதில்லை. காதலிக்கும்போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்திற்கு பிறகு முற்றிலும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் அலட்சியமே!

இதைத் தவறாக பயன்படுத்திக்கொள்ளும் சில ஆண்கள் தற்போதைய இணையத் தொழில் நுட்பங்களை(Social Network) தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து சமூக அவலங்களுக்கு ஆளாக்குவதோடு, அவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள்.

அப்படி ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம். படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது..” என்றார்.

Our Score