Notes Entertainment நிறுவனமும், AMG Sports Chennai நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்.’
இந்தப் படத்தில் ஸ்ரீராம், விஜய், சஹானா, ராஜேஷ், ரசிகா, ஒலிவா, மர்லின், A.J.ஹரிஷரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகம் – போடி விஜயகுமார், மக்கள் தொடர்பு – நிகில், ஒளிப்பதிவு – K.S.செல்வராஜ், இசை – ஸ்ரீராம், எழுத்து, இயக்கம் – ராஜபல்லவி ராஜா.
இந்தப் படம் பேட்மிண்ட்டன் எனப்படும் பூப்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ளதாம்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை வடபழனி ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
[Not a valid template]