full screen background image

டாப்ஸியின் நடிப்பில் வரவிருக்கும் ‘பொலிட்டிக்கல் ரவுடி’..!

டாப்ஸியின் நடிப்பில் வரவிருக்கும் ‘பொலிட்டிக்கல் ரவுடி’..!

பல மொழி மாற்று படங்களை தயாரித்த பட நிறுவனம் எஸ்.சுந்தரலட்சுமியின் சிவம் அசோசியேட் ஸ். இந்நிறுவனம் தற்போது தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘வஸ்தாது நா ராஜு’ என்ற பெயரில் வெளிவந்த படத்தை தமிழில் ‘பொலிடிக்கல் ரவுடி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.

இதில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்திருக்கிறார். டாப்ஸி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், சாயாஜி சிண்டே, பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எஸ்.கோபால் ரெட்டி

இசை – மணி சர்மா

பாடல்கள் – தணிக்கொடி, புன்னியா, தமிழமுதன், சிபிசந்தர்

வசனம் – சிபி சந்தர்

எடிட்டிங் – இளங்கோ

இணை இயக்கம் – ராதாகிருஷ்ணன்

கதை, திரைக்கதை, இயக்கம் – ஹேமந்த் மதுகர்

தயாரிப்பு – எஸ்.சுந்தரலட்சுமி

படத்தின் கதை என்னவெனில், ஊரில் பெரிய ரௌடியாக இருக்கும் சாயாஜி சிண்டேவிடம் அடியாளாக இருப்பவர் பிரகாஷ்ராஜ். விஷ்ணு – டாப்ஸி இருவரையும் ஓர் இடத்தில் பார்த்த பிரகாஷ்ராஜ் எடுக்கும் அதிரடி முடிவுதான் கதை. உண்மையாக விஷ்ணுவுக்கும் டாப்ஸிக்கும் பழக்கமே இல்லாத நிலையில் பிரகாஷ்ராஜ் எடுத்த தவறுதலான முடிவின் தொடக்கம்தான் இந்த கதை.

தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது இப்படம். இதனாலேயே தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Our Score