ஜீவா, சிபிராஜ், ஹன்சிகாவின் நடிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பாவின் இயக்கத்தில், P.T.S. Film International நிறுவனத்தின் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை(மார்ச் 4), உலகம் முழுவதிலும் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘புலி’ படம் தொடர்பாக பிரச்சனை நிலவி வந்த நிலையில், விநியோகஸ்தர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
காமெடியும், பேன்டசியும் கலந்த கதைக் களத்தில், ஜீவாவின் 25-வது படமாக வெளியாகும் இப்படம், அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் கண்டுகளிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகி உள்ளது.