full screen background image

வருகிறான் ஜுனியர் என்.டி.ஆர். – ஹன்சிகா நடிக்கும் ‘போக்கிரி பையன்’

வருகிறான் ஜுனியர் என்.டி.ஆர். – ஹன்சிகா நடிக்கும் ‘போக்கிரி பையன்’

தெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக வலம் வரும் ஜுனியர் என்.டி.ஆர். அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘கன்த்திரி.’

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், இந்தி நடிகை கஜோலின் தங்கையான தனிஷா முகர்ஜியும் நடித்துள்ளனர்.

மேலும், பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, சயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசை – மணிசர்மா, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ்.

தெலுங்கில் நூறு நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடிய இந்தப் படம் இப்போது ‘போக்கிரி பையன்’ என்னும் பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; முடிவில் தர்மம் வெல்லும்.’ – இதுதான் இந்த ‘போக்கிரி பையன்’ படத்தின் மையக் கரு…” என்கிறார் இயக்குநர் ரமேஷ்.

ஊரில் யார் என்ன உதவி கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுக்கும் குடும்பம். இந்தக் குடும்பத்தில் வீட்டு வேலைக்காக வருகிறான் ஒருவன். அவனால் செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடியால் அந்தக் குடும்பமே  அவமானப்படுத்தப்பட்டு நடுத்தெருவுக்கு வருகிறது. அந்தத் துரோகத்தை முறியடித்து மோசடியால் இழந்த சொத்தை மீட்டெடுக்கும் நாயகனாக ஜுனியர் என்.டி.ஆர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை ஓம் ஸ்ரீமுனிஸ்வரர் மூவீஸ் தயாரித்து வழங்க.. தமிழகமெங்கும் வெளியிடும் விநியோக உரிமையை சஞ்சீவி ராமன் வாங்கியுள்ளார்.

வரும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று இந்த ‘போக்கிரி பையன்’ தமிழகத்தில் களமிறங்குகிறான்.

Our Score