மார்ச் 4-ம் தேதி வெளியில் வருகிறான்  ‘பிச்சைக்காரன்’

மார்ச் 4-ம் தேதி வெளியில் வருகிறான்  ‘பிச்சைக்காரன்’

விஜய் ஆண்டனி ஹீரோவாகவும், சத்னா டைட்டஸ் ஹீரோயினாகவும் நடிக்க, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பிச்சைக்காரன்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி வெளிவர உள்ளது.

"தமிழ் திரையுலகத்துக்கு இது நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல தரமான கதையம்சம் உள்ள படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே 'பிச்சைக்காரன்'  போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும்  என்ற நம்பிக்கையை தருகிறது.

ரசிகர்கள் இடையேயும். திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குநர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பும் மிகப் பெரியது. 'பிச்சைக்காரன்' அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

எங்களது நிறுவனமான கே.ஆர். பிலிம்ஸ் மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை  வெளியிடும் Skylark entertainment நிறுவனத்தினருக்கும் 'பிச்சைக்காரன்' திரைப் படம் பெறவிருக்கும் வெற்றியின் மூலம் பெரும் மதிப்பு கிடைக்கும் என நம்புகிறோம்..." என்கிறார் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரான சரவணன்.